கலைஞர் ஆட்சியில் STF முடக்கப்பட்டது என்றால் என்ன அர்த்தம்.
வீரப்பன் குறித்து இந்த வருடத்தில் மட்டும் இரண்டு டாகுமெண்டிரி சீரிஸ்கள் வந்துவிட்டன.
இரண்டிலும் தமிழ்நாடு காவல்துறையின் STF வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் எல்லையோர கிராமங்களில் இருக்கும் எளிய மனிதர்கள் மீது நடத்திய மனித வேட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Work shop கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் அதற்கு முன்பும் பின்பும் இல்லாத அளவில் காவல்துறையின் வதைமுகாம்கள் மனிதத்தன்மையற்ற வகையில் இயங்கியிருக்கின்றன. எத்தனையோ பெண்கள், கர்ப்பிணிகள், சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றனர்.
கேட்பாரின்றி பலர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த டாகுமெண்டிரிகளுக்கு முன்பே கூட மனித உரிமை ஆர்வலர் ச.பாலமுருகன் இவற்றை சோளகர் தொட்டி என்னும் நாவலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
இத்தனை கொடுமைகள் நடந்திருந்தும் இதுநாள் வரை இக் குற்றங்களுக்கு ஜெயலலிதா என்னும் பேயின் பெயர் எங்காவது பொறுப்பாக்கப்பட்டதை கவனித்திருக்கிறீர்களா? இந்த வதைமுகாம்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வீரப்பன் தேடுதல் வேட்டை மற்றும் பட்டுக்கூடு ஆப்பரேஷனின் வெற்றி ஆகியவற்றுக்கு ஊடகங்கள் ஜெயலலிதாவுக்குக் க்ரெடிட் கொடுக்கத் தவறுவதில்லை என்பதையும் கவனியுங்கள்.
அதே நேரத்தில் கலைஞர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் STF முடக்கப்படுகிறது. அதற்கு பல் பிடுங்கப்படுகிறது., தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்படுத்தப்படுகிறது என்று எதிர்மறையான ஒரு பிரச்சாரமும் ஊடகங்களில் தொடர்ந்து கட்டமைக்கப்படும். STF முடக்கப்படுகிறது என்றால் அதன்பொருள், வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் மனிதவேட்டை நிறுத்தப்படுகிறது என்பதுதானே?
இலங்கைத்தமிழர் விவகாரத்தின் மினியேச்சர் போலவே தோன்றுகிறதல்லவா? நம்மாளுக்கு செய்த நன்மைக்கும் அடிவிழும்; பாப்பாத்திக்கோ அட்டூழியங்களுக்கு அயர்ன்லேடி பட்டம் கிடைக்கும். இதெல்லாம் தானாகவா நடக்கிறது? நடத்துகிறார்கள். அதற்குப் பெயர்தான் ஊடகப்பிராத்தல். அதை வெளிப்படையாகப் பெயர் சொல்லி அழைக்கும் காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. அதனால் தான் ஆங்காங்கே பதட்டமடைகின்றனர்.