சந்துலே சிந்து பாடிய மன்மத குமாரு!

1980களின் தொடக்கத்தில் சென்னை காசிமேடு மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் அந்த இளைஞர் ரொம்ப பிரபலம்.

“ஊட்டு மாடியிலே படம் போட்டுக் காட்டுவாரே, அந்தத் தம்பியா? விநாயகபுரத்துலே போய் கவுன்சிலரு துரைராஜ் வீடுன்னு கேளு. காட்டுவாங்க” என்பார்கள்.

ஒரு காலத்தில் திமுகவில் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் துரைராஜ். பழைய வண்ணாரப்பேட்டை பாரத் தியேட்டரில் பணியாற்றியவர். தியேட்டர் ஊழியர் என்பதால் படம் பார்க்க வருபவர்களோடு நன்கு பழகி, அரசியலிலும் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டியவர்.

அவருக்கு மூன்று மகன்கள். மூன்று மகள்கள்.

முதல் மகன்தான் ஊட்டு மாடியில் பிலிம் காட்டி ஃபேமஸ் ஆன ஜெயக்குமார்.

அப்போதெல்லாம் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் ‘டெக்கு’ வாங்கி வருவார்கள். அதில் திருட்டு கேசட் போட்டு புதுப்படம் பார்ப்பது ஒரு திரில்.

துரைக்குமாரின் மகன் ஜெயக்குமாருக்கு சிங்கப்பூரிலிருந்து அம்மாதிரி ஒரு ‘டெக்கு’ கிடைத்தது.

அப்பா தியேட்டர் ஊழியர் என்பதாலேயோ என்னவோ, ஜெயக்குமாருக்கும் சினிமா மீது காதல்.

தலையில் கருகருவென்று சுருட்டு முடியோடு சிகப்பாக அழகாக இருந்த ஜெயக்குமாருக்கு, கமல்ஹாசன் மாதிரி சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசையும் இருந்தது.

ஆசை இருந்தா போதுமா? தாசில் பண்ண முடியுமா?

எனவே தன் சினிமா ஆசையை ஏரியாக்காரர்களுக்கு படம் போட்டுக் காட்டி தீர்த்துக் கொண்டார்.

அதுவும் சும்மா அல்ல.

புதுப்படம் என்றால் ஒரு ரூபாய். பழைய படங்களுக்கு ஐம்பது பைசா.

தினமும் என்ன படம் என்று ஒரு வெள்ளைப் பேப்பரில் ஸ்கெட்ச் பேனாவில் எழுதி, ஏரியாவில் போஸ்டர் மாதிரி ஆங்காங்கே இவரே ஒட்டுவாராம்.

இது தவிர்த்து நள்ளிரவில் ‘ஸ்பெஷல் ஷோ’ போடுவார்.

வயது வந்தவர்களுக்குதான் அனுமதி. இதற்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை சிறப்புக் கட்டணமாம். இம்மாதிரி ஜெயக்குமார் வீட்டு மொட்டை மாடியில் படம் பார்த்து எழுச்சி பெற்றவர்கள் ஏராளம். இன்றைய சேலம் சித்த வைத்தியருக்கு அன்றே கிராக்கிகளைப் பிடித்துக் கொடுத்துப் பெருமை நம்ம ஜெயத்தையே சாரும்.

அப்போது பச்சையப்பா கல்லூரியில் பி.எஸ்.சி. முடித்திருந்தார். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தவர், சைடு பிசினஸாக வீடியோ தியேட்டர் நடத்தி, லம்பாகவும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

திருட்டு வீடியோ போடுவது குற்றம் என்பதால் அவ்வப்போது போலீஸ் கேஸ் ஆனது.

இதிலிருந்துத் தப்பிக்க வழக்கறிஞர்களின் உதவி தேவைப்பட்டது.

போலீஸ் மாமூல், லாயர் பீஸ் என்று ஏகத்துக்கும் செலவாக திருட்டு வீடியோ பிசினஸில் ஜெயக்குமாருக்கு லாஸ் ஆனது.

நாமே வழக்கறிஞர் ஆகிவிட்டால், நம்ம திருட்டு வீடியோ கேஸ்களை நாமே பார்த்துக்கலாம் என்று சட்டக்கல்லூரியிலும் சேர்ந்தார்.

அப்பா கவுன்சிலராக வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி என்று கவுரவத்தோடு வலம் வந்ததைப் பார்த்தவருக்கு அரசியல் ஆசையும் லேசாக இருந்தது.

மாணவப் பருவத்தில் கம்யூனிஸ்டாகதான் இருந்தார்.

அப்போது சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே திமுகவுக்கு செல்வாக்கு அபரிதமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர், அதிமுக சார்பாக இளைஞர்களைக் கவரக்கூடிய அமைப்புகளை ஏற்படுத்த கட்சியினருக்குக் கட்டளையிட்டார்.

அம்மாதிரி ஓர் ஏற்பாட்டில்தான் மதுசூதனன் ஃபைனான்ஸ் செய்ய ராயபுரத்தில் ‘அதிமுக பட்டதாரிகள் பேரவை’ ஆரம்பிக்கப்பட்டது.

திருட்டு வீடியோ பிசினஸைவிட அதிமுகவில் பேரவை பிசினஸில் துட்டு அதிகம் புரளும் என்பதால் அதிமுகவுக்கு தாவி அந்தப் பேரவையின் லோக்கல் கை ஆனார் ஜெயக்குமார்.

பின்னர் திமுகவை டிப்பி காப்பி அடித்து அதிமுகவும் இளைஞர் அணியைத் தொடங்கியபோது, ராயபுரம் பகுதியில் மதுசூதனின் அடிவருடி ஜெயக்குமாருக்கு யோகம் அடித்தது. ஒருக்கட்டத்தில் ஒட்டுமொத்த இளைஞர் அணியின் தலைமைப் பொறுப்பையும் அவரே கைப்பற்றினார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்தபோது எந்தப் பக்கமாக போவது என்று ஜெயக்குமாருக்குக் குழப்பம்.

தன் பேரில் ‘ஜெய’ இருப்பதால், ஜெயலலிதா பக்கமாகப் போய்விடலாம் என்று டாஸ் போட்டு முடிவெடுத்தார் இந்த கொள்கைக் குன்று.

1989 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே போட்டியிட வாய்ப்பு கேட்டார். ரொம்ப சின்னப் பையனாக இருக்கிறார் என்று வாய்ப்பு மறுக்கப்பட்டது.

1989ல் அமைந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991ல் மீண்டும் தேர்தல் வந்தது.

இம்முறையும் சீட்டு கேட்டார்.

வேட்பாளர் நேர்காணலில், “என்ன தகுதியில் நீங்க சீட்டு கேட்கறீங்க?” என்று ஜெயலலிதா கேட்க, “என்னோட பேரு ஜெயக்குமார்” என்றிருக்கிறார் நம்மாளு.

தன்னுடைய அண்ணன் பேரும் ஜெயக்குமார் என்பதால் சென்டிமெண்ட்டாக ஃபீல் செய்த ஜெயலலிதா, ராயபுரம் தொகுதிக்கு இவரது பேரை டிக் அடித்தார்.

மேலும் –

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் முதல் தொகுதியாக ராயபுரம் தொகுதியைதான் தேர்தல் கமிஷன் பட்டியலிட்டிருக்கிறது.

“முதல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரில் ‘ஜெயம்’ இருந்தால் ‘ஜெயம்’ நிச்சயம் அக்கா” என்று சசிகலாவும் எடுத்துக் கொடுக்க நம்ம ஜெயத்துக்கு அடிச்சது யோகம்.

ராஜீவ்காந்தி படுகொலை அனுதாப அலையில் அதிமுக ஜெயிக்க, எம்.எல்.ஏ.க்களில் மீனவர் சமூகத்தைச் சார்ந்தவருக்கு வாய்ப்பு என்று அமைச்சராகவும் ஆனார்.

அதுநாள் வரை அமைதிப்படை அமாவாசையாக அமைதியாக இருந்தவர் அமைச்சரான பின்புதான் ஆட்டத்தை ஆரம்பித்தார்.

சென்னையில் அதிமுக தலைகளாக கம்பீரமாக வலம் வந்த மதுசூதனன், ஆதி.ராஜாராம், சைதை துரைசாமி போன்றவர்களை அம்மாவிடமும், சின்னம்மாவிடமும் அவ்வப்போது போட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

அதன் அடிப்படையில் மற்ற அதிமுக பெருந்தலைகள் சொல்லவொண்ணா தொல்லைகளுக்கு ஆளானார்கள்.

2006 தேர்தலில் மதுசூதனனுக்கு தேர்தலில் போட்டியிடகூட அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதாவது பரவாயில்லை. மதுசூதனின் அல்லக்கைகளுக்கே அல்லக்கையாக இருந்த அடிமட்ட அல்லக்கை கு.சீனிவாசனுக்கு போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து மதுசூதனை ரொம்பவே அசிங்கப்பட வைத்தார் ஜெயக்குமார்.

2011 தேர்தலில் எப்படியோ அம்மாவை சமாதானப்படுத்தி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கினார் சைதை துரைசாமி. அவர் தோற்கப்பட வேண்டி எல்லா உள்வேலைகளையும் செய்தார் ஜெயக்குமார். எம்.எல்.ஏ தேர்தலில் தோற்றாலும் கூட ஜெயக்குமாரை தாண்டி சென்னை மாநகராட்சியின் மேயர் ஆனார் துரைசாமி.

துரைசாமி தலைமையில் ஜெயக்குமாரால் ஓரங்கட்டப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். தமாகாவிலிருந்து அதிமுகவுக்கு வந்த வெற்றிவேலிடம், ஜெயக்குமாரை சிதறடிக்கும் அசைன்மெண்ட்டை ஒப்படைத்தார்கள்.

2011 தேர்தலில் வென்று சபாநாயகராகி இருந்த ஜெயக்குமாருக்கு தனக்கு எதிராக நடந்த சதித்திட்டங்கள் தெரியாது. ஜெயலலிதாவுக்குப் பிறகு ஜெயக்குமார்தான் என்கிற ஹோதாவில் இருந்தார். 2012ஆம் ஆண்டு நடந்த தன்னுடைய பிறந்தநாளை ஜெயலலிதா பிறந்தநாளைவிட விமரிசையாக போஸ்டர் ஒட்டி, பேனர் வைத்து, வடசென்னையே விழாக்கோலம் பூணும் வகையில் கொண்டாடினார் ஜெயக்குமார். ‘அடுத்த முதல்வரே’ என்றெல்லாம் போஸ்டர் அடித்து அமளிதுமளிப் படுத்தினார்கள் அல்லக்கைகள்.

இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகளை மொத்தமாகப் படம்பிடித்த எதிர்கோஷ்டி, மொத்த ஆதாரங்களையும் கட்சித்தலைமையிடம் ஒப்படைக்க சின்னம்மா முகம் சுளித்தார். தன் பிறந்தநாளை தவிர வேறெவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டாலும் டென்ஷன் ஆகும் ஜெயலலிதா, உடனடியாக ஜெயக்குமாரை கூப்பிட்டு லெஃப்ட் & ரைட் ரெய்டு விட்டார். அம்மாவின் ரெய்டு என்றாலே எப்படியிருக்கும் என்று கன்னம் பழுத்த அவரது பழைய ஆடிட்டர்களுக்குதான் தெரியும்.

சபாநாயகர் பதவி பறிக்கப்பட்டு, அதிமுகவில் தனிமைப்படுத்தப்பட்டு புலம்பக் கூடிய சூழல் ஜெயக்குமாருக்கு.

இந்நிலையில் எப்படியாவது மேலிடத்தை சரிக்கட்ட தன்னுடைய மகன் டாக்டர் ஜெயவர்த்தனின் திருமணத்தை பயன்படுத்திக் கொண்டார்.

ஜெயக்குமார் மகன் திருமணத்துக்கு தனியாக தேதி கொடுக்காத ஜெயலலிதா, கட்சிக்காரர்கள் சிலருக்கு கல்யாணம் நடக்கும்போது கும்பலோடு கோவிந்தாவாக சேர்த்து நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி தேதி கொடுத்தார்.

அந்தக் கல்யாணத்தில் தன் மனைவி ஜெயக்குமாரி, மகன் ஜெயவர்த்தன் இருவரையும் ஜெயலலிதா முன்பாக அழவைத்து அனுதாபம் கோரினார். ஓரளவுக்கு மனம் இறங்கினாலும் மீண்டும் ஜெயக்குமாருக்கு அமைச்சரவைப் பதவி தர ஜெ. முன்வரவில்லை. பதிலாக ஜெயவர்த்தனுக்கு 2014 எம்பி தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தொகுதி மறுக்கப்பட்டால் தற்கொலையே செய்துக் கொள்வேன் என்று மேலிடத்தை மிரட்டியே மீண்டும் ராயபுரம் தொகுதியைக் கைப்பற்றினார் ஜெயக்குமார். சசிகலா பரிதாபப்பட்டு அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவும் பரிந்துரைத்தார்.

இருப்பினும் –

அம்மாவிடம் தன் மேல் இருந்த பழைய அபிமானம் போய்விட்டதே என்று சக அமைச்சர்களிடம் புலம்பிக் கொண்டேதான் இருந்தார். சட்டம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் என்று வளம் கொழித்த 2001 – 2006 காலக்கட்டத்து அமைச்சர் அதிகாரத்தை நினைத்து நினைத்து மனம் வெதும்பிக் கொண்டிருந்தார்.

எவரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா திடீர் மரணமடைய, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிக் குழப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜெயக்குமார். ஓபிஎஸ் முதல்வரானபோது நைசாக அவரை தாஜா செய்து நிதித்துறையை அமைச்சரவையைக் கைப்பற்றினார்.

தர்மயுத்தமெல்லாம் நிகழ்ந்து காட்சிகள் மாறியபோது சசிகலா காலடியில் சரண்டர் ஆகி, தன் நிதித்துறையை காப்பாற்றிக் கொண்டார்.

தவழ்ந்துப் போய் சசிகலாவின் கால் பிடித்து முதல்வரான எடப்பாடி, பாஜகவோடு கள்ளக்கூட்டு சேர்ந்து சசிகலாவையே சிறைக்கு அனுப்பி, கட்சியிலிருந்து ஓரம் கட்டியபோது எடப்பாடிக்கு அனுசரணையாக இருந்தவர் ஜெயக்குமார்.

முன்பு தன்னை சபாநாயகர் பதவியிலிருந்து கீழிறக்கி, அம்மாவுக்கு ஆகாதவனாக செய்ததில் சசிகலாவுக்கு பங்குண்டு என்று உள்ளுக்குள்ளே மருகிக் கொண்டிருந்த ஜெயக்குமார், இதுதான் சமயமென்று பயன்படுத்திக் கொண்டு சசி குடும்பத்துக்கும், அதிமுகவுக்குமான விலகலை அதிகப் படுத்தும் விதமாக பேசத்தொடங்கினார். “இனி சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை” என்று முதன்முதலாக முழக்கமிட்டவர் நம்ம ஜெயக்குமார்தான்.

ஜெயலலிதா இருந்தபோது ஊமைகளாக விளங்கிய அமைச்சர்கள், அவரது மறைவுக்குப் பிறகு இஷ்டத்துக்கும் உளறத் தொடங்கி ஊடகங்களில் வைரல் ஆனார்கள். இந்தப் போக்கை முதன்முதலாக ஆரம்பித்து வைத்தப் பெருமையும் ஜெயக்குமாரையே சாரும்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி கணக்காக ‘தானுண்டு தன் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சி உண்டு’ என்றிருந்த கமலை நோண்டி, அரசியல் கட்சி ஆரம்பிக்க வைத்தப் பெருமையும் ஜெயக்குமாருக்குதான்.

ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில் கட்சியில் தான் ஓரம் கட்டப்பட்டிருந்த நிலை தனக்கு திரும்ப ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓவராக ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார்.

2021 தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தோற்றது அவரது அரசியல் வாழ்வின் அஸ்தமனத்துக்கு ஆரம்பம். இனி அதிமுகவுக்கே எதிர்காலம் இல்லை எனும்போது, அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவராக இருக்கும் ஜெயக்குமாருக்கு ஏது எதிர்காலம்?

அதெல்லாம் இருக்கட்டும்.

மெயின்மேட்டருக்கு மெயின்ரோடுக்கு வாப்பா என்று கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் சத்தமாவே கேட்குது.

தோ வர்றோம்.

“எம்பி ஒருத்தருக்கு தம்பி பாப்பா பொறந்திருக்கு” என்று டிடிவி தினகரனுக்கு வலது கையாகவும், ஜெயக்குமாருக்கு ஜென்மவிரோதியாகவும் இருந்த மறைந்த வெற்றிவேல் கிசுகிசு பாணியில் அறிவித்தபோது, அனைத்து அதிமுக எம்பிக்களுமே அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

ஆனால் –

ஜெயக்குமார் மட்டும் யாருக்கோ தேள் கொட்டினமாதிரி ஆவேசமாகி, கைங்கர்யம் தனதுதான் என்பதை அவரே வெளிப்படுத்தி மாட்டிக் கொண்டார்.

30 வயதுக்கு மேலாகியும் தனக்கு திருமணமாகாத வருத்தத்தில் இருந்த சிந்து என்கிற பெண், ஜோதிடர் ஒருவரை பரிகாரத்துக்காக நாடியிருக்கிறார். ஜோதிடரோ பல்லாயிரம் ரூபாய் பணத்தைக் கறந்து மோசடி செய்ய, இழந்தப் பணத்தை மீண்டும் பெற அமைச்சரை நாடியிருக்கிறார்கள் சிந்துவும், அவரது அம்மாவும்.

விஷயத்தை முழுவதும் கேட்ட அமைச்சர் பரிகார மேட்டர் சம்பந்தமாக வந்த சிந்துவை யதார்த்தமாக, பதார்த்தமாக்கிக் கொள்ள முப்பது வயதைக் கடந்த எம்பி ஜெயக்குமாருக்கு தம்பிப் பாப்பா பிறந்தான்.

யாரும் நேரடியாக குற்றம் சாட்டாத நிலையில்லை ‘நானில்லே நானில்லே’ என்று கையைத் தூக்கிக் கொண்டு ஜெயக்குமாரே ஆஜராகி விட்டார்.

அவர் மறுத்த நிலையில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் ஜெயக்குமார் பெயர், சிந்துவின் அம்மாவோடு ‘மெயின்ரோட்டுக்கு வாங்கம்மா…’ என்று ஜெயக்குமார் பேசிய ஆடியோ என்று அடுத்தடுத்து அசைக்க முடியாத ஆதாரங்கள் வெளிவந்தன.

தொகுதி வாசிகளிடம் விசாரித்தபோது, “அவரு சின்ன வயசுலே இருந்தே இந்த விஷயத்துலே கொஞ்சம் வீக்னஸ் உள்ளவருதாங்க… அந்த வயசுலேயே ஏரியா வாசிகளுக்கு வீடியோவில் ‘ஸ்பெஷல் ஷோ’ காட்டுனவராச்சே, வேற எப்படியிருப்பாரு? ஏற்கனவே இதுமாதிரி நிறைய மேட்டருலே அடிப்பட்டவருதான்” என்று பகீர் தகவலை சொல்கிறார்கள்.

‘வீடியோ’ காட்டிக் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே வாட்ச்மேன் ஒருவரின் மனைவியோடு நைட் டியூட்டி செய்து கையும், களவுமாக பிடிபட்டு அசிங்கப்பட்டிருக்கிறார் நம்ம மெயின்ரோடு. அவருக்கு திருமணம் நடந்ததேகூட இதுமாதிரி ரசபாசமான ஒரு சந்தர்ப்பத்தில்தான் என்கிறார்கள்.

சிந்து விவகாரம் பெரிதாகக் கிளம்பியபோது உடனடியாக தன்னுடைய அல்லக்கைகளான ஒரு சூப் கடைக்காரர் மற்றும் வெட்டி வக்கீல் இருவரை வைத்து சிந்துவின் மீதும், அவரது அம்மாவின் மீதும் பொய்வழக்குகள் போட்டு தற்காலிகமாக ஆஃப் செய்து வைத்திருக்கிறார் மெயின்ரோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *