2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது அதுதொடர்பான டிவி விவாதம் ஒன்றில் நடராஜ் என்பவர் அன்றைய ஜெயலலிதா அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் அதிமுக உறுப்பினரும் முன்னாள் டி.ஜி.பி-யுமான நட்ராஜ் என தவறாக நினைத்து, விவாதத்தில் கலந்து கொள்ளாத நட்ராஜை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா.
’’அதிமுகவில் இருந்து கொண்டு எப்படி அரசை கண்டித்து நான் பேசுவேன். அப்படியொரு சிந்தனையே எனக்கு தோன்றாதே’’ என நட்ராஜ் பேட்டி எல்லாம் கொடுத்தார். உடனே அடுத்த நாளே நட்ராஜ் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டார்.
இங்கே இரண்டு விஷயங்கள் தோன்றுகிறது.
1. செம்பரம்பாக்கம் ஏரியை முறையில்லாமல் ஜெயலலிதா அரசு திறந்ததால்தான் அன்றைக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எந்த நட்ராஜ் என்கிற விவரம்கூட தெரியாமல் ஒருவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கி, பிறகு சேர்த்தார் என்றால், அன்றைக்கு செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை எப்படி இருந்திருக்கும்?
2. ’’அதிமுகவில் இருந்து கொண்டு எப்படி அரசை கண்டித்து நான் பேசுவேன். அப்படியொரு சிந்தனையே எனக்கு தோன்றாதே’’ என அன்றைக்கு பேசிய நட்ராஜ், இன்றைக்கு சமூக வலைதளங்களில் திமுக அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
~ பராகத் அலி, மூத்த பத்திரிகையாளர்.