நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலட்சுமி வைத்த பாலியல் புகார்களுக்கே விடை இன்னும் தெரியாமல் இருக்கும் சூழலில், அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் தம்பி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் 2019ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற திருமுருகப் பெருவிழாவுக்காக தான் செய்த செலவினங்கள், சீமானுக்கு போட்ட ரூமுக்கான ஆதாரங்கள், அங்கு RHR ஹோட்டலுக்கு வந்த நடிகை கஸ்தூரியின் வீடியோ ஆதாரங்கள், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட சீமானின் போர்ப்படைத்தளபதிகளுக்கு தங்க; திங்க; பருக செய்யப்பட்ட செலவினங்களுக்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாகப் பதிவிட்டுள்ளது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.