இஸ்லாமிய சிறைக் கைதிகள் விவகாரத்தில் சங்கிகள் பரப்பும் அவதூறு

இஸ்லாமியர் சிறைவாசிகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய ஒத்துக்கொண்ட பின்பும் தமிழ்நாடு அரசு ஆளுநரை மீது பழி சுமத்தி காலம் தாழ்த்துகிறது என ஊடகவியலாளர்களால் அவதூறு பரப்பப்படுகிறது .

 

உண்மை நிலை என்ன ?

1) குறிப்பிட்ட வழக்கு விடுதலை தொடர்பானது அல்ல, விடுப்பு தொடர்பானது

2) கூலை இப்ராஹிம் என்பவருக்கு 04/04/23 அன்று 40 நாள் விடுப்பு கொடுத்தது சிறைத்துறை. 15/05/23 அன்று அவர் சிறைக்கு திரும்ப வேண்டிய நிலையில், 17/04/23 அன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி செப்டம்பர் 2023 வரை விடுப்பு நீட்டிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் கூடுதல் பதில் மனுவில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள தகவல்

 

Image

1) ஆயுள் சிறை கைதிகள் விடுதலை தொடர்பாக ஆணையம் அமைத்து, 11/08/23 அன்று வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தது தமிழ்நாடு அரசு

2) 07/10/23 அன்று மாவட்ட அளவிலான குழுவும், 09/10/23 அன்று மாநில அளவிலான குழுவும் பரிந்துரை செய்தது

3) இதனை தொடர்ந்து கூலை இப்ராஹிம் என்பவரை சட்டப்பிரிவு 161 ன் அடிப்படையில் முன் விடுதலை செய்யும் கோப்பு, 18/10/23 அன்று ஆளுநருக்கு அனுப்ப்பட்டுள்ளது.

இதனை கூடுதல் பதில் மனு மூலமாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு அரசு கொண்டு சென்றுள்ளது.

இதனையும் கருத்தில்கொண்டு நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இது தான் நீதிமன்றத்தில் நடைபெற்றது

1) நாங்களே விடுவிப்போம் என்று நீதிமன்றமும் சொல்லவில்லை

2) அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என தமிழ்நாடு அரசும் சொல்லவில்லை

இரண்டுக்கும் அடிப்படை ஆதாரமே இல்லை.

இதில் அரசியல் செய்யும் ஆளுநரையும், எடப்பாடி பழனிசாமியையும் பாதுகாக்க அவதூறு பரப்பி, தங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள் சிலர்.

– சூரியா கிருஷ்ணமூர்த்தி

 

‘ஜாமினில் வெளியே வந்திருக்கும் சிறைவாசிகளை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடக்கூடாது என்பது அரசு தரப்பின் கவலை என்பதாகத்தான் நீதிமன்றத்தின் உத்தரவில் இருக்கிறது இதை மறைப்பதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? தன்னுடைய ஆட்சியில் பஸ் எரிப்பு போராளிகள், மேலவளவு முருகேசன் வீரர்கள் ஆகியவரை விடுவித்த ஆளுமை எடப்பாடியை இஸ்லாமியர்களின் நண்பனாக சித்தரிக்க வேண்டும் என்பதை தவிர வேறென்ன உயர்ந்த நோக்கம் இருக்க முடியும் எடப்பாடி is still learning?’ என்று பத்திரிக்கையாளர் மகிழ்னன் கேள்வி எழுப்பியுள்ளார்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *